நைஜீரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் நேற்று தொழுகை நடந்து வந்தது. இதன்போது, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உந்துருளிகளில் வந்து, மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலால் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.