அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, பெருந்தெருக்கள் அமைச்சு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் இருந்து நீக்கப்பட்டு, அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (johnston fernando) தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான அறிவிப்பையடுத்து, அமைச்சின் கீழ் உள்ள மகநெகும, இயந்திர தளபாட நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மகநெகும ஆலோசனை நிறுவனம், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் பிரதான அதிகாரிகள் பதவிகளில் இருந்து விலக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.