பாண், தொலைபேசி மற்றும் கையடக்கத்தொலைபேசி கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு காரணமாக, சுமார் 2000 பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி மற்றும் கையடக்கத்தொலைபேசி கட்டணங்களை 20 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL)அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love