பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்து பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய் இந்தோ-பசிபிக் பாதுதுள்ளகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி ரோயல் (Jedidiah P Royal) தலைமையிலான குழுவினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.

முதலில் ஜெடிடியா பி ரோயலுடன் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் அந்தோனி நெல்சன் ஆகியோர் கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு நேற்று விஜயம் செய்தனர். இதன்போது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி ரோயல் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவினர் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு சென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

Spread the love