இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் சந்தையில் தொலைபேசி உதிரிப் பாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தொலைபேசி வர்த்தக நிறுவன உரிமையாளர் சங்கம் தெரிவித்தது. இதனால் நுகர்வோரும் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில தொலைபேசி உதிரிப் பாகங்களின் விலைகள் 30% முதல் 60% வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தொலைபேசி வர்த்தக நிறுவன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், தொலைபேசி உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடும் சந்தையில் நிலவுகின்றது. தொலைபேசி உதிரிப்பாகங்கள் மற்றும் தொலைபேசி விலை அதிகரிகரித்துள்ளதால், விற்பனை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை வௌியிட்டனர்.
உள்நாட்டு பால் மா விலை நேற்று (04) நள்ளிரவு முதல் அதிகரிப்பு. அதற்கமைய, 400 கிராம் பால் மா 100 ரூபாவால் விலை அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால் மா 230 ரூபாவால் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மா விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதான இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவிற்கான விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டார். எனினும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.