இலங்கையின் புதிய பிரதமராக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் பதவிக்கு பல்வேறு அரசியல் வாதிகளின் பெயர்கள் ஆராயப்பட்டபோதும் தினேஷ் குணவர்தனவையே பிரதமராக நியமக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, 20 முதல் 25 பேர் வரையிலானோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதுடன், இவர்களில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களாக பதவி யேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.