இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று மரணமடைந்தார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத்ரத்னா மற்றும் பத்மபூஷன். பத்மவிபூஷன் மற்றும் தாதா சாகேப்பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.