வானளாவிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளை வியக்க வைக்கும் சவுதி அரேபிய அரசு, அடுத்த பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை உருவாக்கி வருவதாகவும், நகரின் மையமாக, முகாப் என்று அழைக்கப்படும் பிரமாண்ட கட்டிடம் இடம்பெற உள்ளதாகவும், அரபு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரமாண்ட நகர திட்டம் தொடர்பான வீடியோவை சவுதி அரசு வெளியிட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முகாப் திட்டமானது, 400 மீற்றர் உயரம், 400 மீற்றர் நீளம், 400 மீற்றர் அகலம் கொண்ட கனசதுர வடிவ கட்டுமானமாக அமைய உள்ளது.