பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி திடீர் பயணம்

ரஷ்யாவுடன் போரிடுவதற்கு போர் விமானங்கள், ஏவுகணைகளை தமக்கு வழங்கக் கோரி, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு திடீர் பயணம் மேற் கொண்டு உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. இராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆயுத, நிதி சார்ந்த உதவிகள் கிடைத்து வருகின்றன. மறுபுறம் ரஷ்யாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திடீரென்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர்:-

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க போர் விமானங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார். ரஷ்ய போரின் முதல் நாளில் இருந்து ஆத ரவு அளித்து வரும் பிரிட்டன் மக்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்து கொண்டார். இவ்விடயம் தொடர்பில் இங்கிலாந்து பிரதர்சுனாக் அந்நாட்டு இராணுவ தளத்தில் இருந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, உக்ரைனுக்கு உதவ போர் விமானங்களை வழங்குவது குறித்து. பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இடம்பெற்றது என கூறினார். உக்ரைனுக்கு குறுகிய காலத்தில் ஆயுதங்களை வழங்க வேண்டும். ஆனால், நீண்ட காலத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என சுனாக் கூறினார். அதன் பின்னர், அவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு சென்றார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார்.  ஜெர்மனி நாட்டு ஜனாதிபதி ஓலப்ஸ்கால்சுடனும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு நடந்தது.

Spread the love