பிரித்தானிய அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் நேற்று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வடக்கு மாகாணத்திற்கான திட்டங்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்தின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹில்டன் இணைந்திருந்தார்

Spread the love