பிரித்தானியாவின் எலிசெபத் மகாராணி கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்குக் காணப்படுவதாகவும், மகா ராணிக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் இந்த வாரம், விண்ட்சரில் தனது கடமைகளைத் தொடர்வாரென எதிர்பார்க்கப்படுவதாகவும், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சாள்ஸ், இரண்டாவது முறையாக கோவிட் நேர்மறையான சோதனை செய்தவேளை, இளவரசர் சார்ல் ஸுடன் மகாராணி நேரடித் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி, 70 வருடங்கள் அரியணையில் அமர்ந்து, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாட்டினம் விழாவை கொண்டாடிய சில வாரங்களில், இந்த அறிவிப்பு வெளியானது. இதேவேளை, பிரித்தானிய மகாராணி, மூன்று முறை கொவிட் தடுப்பூசியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.