ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவா செல்கிறது.
மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை 3ஆம் திகதி வியாழக்கிழமை சமர்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான பதிலளிப்பை அன்றைய தினமே முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் உறுதிப்படுத்தினார். இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஜெனிவா கூட்டத் தொடரின் உண்மை நிலையையும் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமை குறித்தும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அவற்றை எதிர்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட இலங்கை இராஜதந்திரக் குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார். மறுபுறம் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் இம்முறை சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தின் வரைபும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.