புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங்கிற்கு சந்திப்பு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாகவும் தற்போது இலங்கையினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங்கிற்கு விளக்கமளிக்கப்பட்ட அதே நேரம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டதில் சில அம்சங்கள் சர்வதேச தரத்திற்கு இணக்கமானதாக இல்லை என அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே அரசாங்கத்தினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பாகவும் தற்போது இலங்கையினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதார முன்னேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இருக்கும் சந்தர்ப்பங்களைகட்டுப்படுத்தும் நோக்கிலே தற்போது அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவருவதன் அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தற்போதைய அரசாங்கத்தினால் மக்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலைமையைகட்டியெழுப்புவதற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களை வரவேற்பநுடன் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த உலக நாடுகளுடன் ஒப்பட்டு பார்க்கையில், இந்தளவு குறுகிய காலத்துக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் தெரிவித்தாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவு ஒன்றை இட்டுள்ளார். நீதியமைச்சருடன் பயங்கரவாத எதிர்ப் புச்சட்டம் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து கலந்துரையாடியதாக அவர் கூயுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தில் சர்வதேசதரங்களுக்கு இணங்காத ஒவ்வொரு அம்சங்கள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம்.

அதேபோல் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவான பொது மற்றும் பாராளுமன்ற கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்ற எமது வலுவான அவசியம் பற்றியும் இதன்போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். மேலும் கருத்து சுதந்திரம் அல்லது ஒன்றுக்கூடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பலன் தரும் கருவியாக அரசியலமைப்பு செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமானது எனவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love