பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும்  முக்கியமான நன்மைகளை

இது 2022ம் ஆண்டு ஆகும். நம் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் நாம் ஆரோக்கியமானதாக மாற்றியுள்ளோம் என்பது வெளிப்படை. ஒருகாலத்தில் நாம் புறக்கணித்த பல உணவு வகைகளை இப்போது தேடித்தேடி சாப்பிட்டு வருகிறோம். அந்த பட்டியலில் பூசணி விதைகளுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. நன்மைகள் நிறைந்ததாக கூறப்படும் பூசணி விதைகளை நாம் ஏன் நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற 4 முக்கியமான காரணங்கள்

ஒரே உணவில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் : பூசணி விதைகள் வெறும் விதைகள் மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இது மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களால் நிரம்பியுள்ளன, இது நமக்கு மெக்னீசியம், ஸின்க், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகளின் கணிசமான தரத்தை வழங்குகின்றன, மேலும் ப்ளோட்டிங்-ஐ குறைக்கின்றன. மேலும் இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் : இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் வழியாக தூக்கம் சார்ந்த சிக்கல் குறையும். ஏனெனில் இது டிரிப்டோபனின் (தூக்கத்தை ஊக்குவிக்கும் அமினோ அமிலம்) இயற்கையான மூலமாகும். நம் உடலுக்கு தேவையான அளவு டிரிப்டோபான் கிடைக்க 200 கிராம் பூசணி விதைகள் போதும். மேலும், இந்த விதைகளில் உள்ள ஸின்க் ஆனது டிரிப்டோபனை செரோடோனினாக மாற்றுகிறது, இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் : பூசணி விதைகள் தோல் மற்றும் முடிக்கும் நன்மை பயக்கும். முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அமினோ அமிலமான குக்குர்பிடசின் என்ற கலவை இதில் உள்ளது. கூடுதலாக, இது வலுவான மற்றும் பளபளப்பான முடியை பராமரிக்க உதவும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூசணி விதைகள் உங்கள் சருமத்தில் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க கொலாஜனையும் தூண்டும்.

வெயிட் லாஸ்-ஐ நிர்வகிக்க உதவும் : பூசணி விதைகளை உட்கொள்வது ஆரோக்கியமான எடை இழப்பு மற்றும் வெயிட் லாஸ் பராமரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறும் ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், பூசணி விதைகள் எனர்ஜி-டென்ஸ் ஆக இருப்பதால், உட்கொள்ளும் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கொழுப்பு, கலோரிகள் மற்றும் சோடியம் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைக்க, பச்சையாக, உப்பில்லாத விதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் பூசணி விதைகளில் அதிக கலோரிகள் இருந்தாலும், அவை புரதச்சத்து நிறைந்தவை. எனவே, உட்கொள்ளும் அளவை கவனமாக சரிசெய்யவும்.

எப்படியெல்லாம் பூசணி விதைகளை உணவில் சேர்க்கலாம்? இந்த சுவையான விதைகளை உண்ண சிறந்த நேரம் காலை வேளை ஆகும் அல்லது உங்கள் உணவுக்கு இடையில் இதை சிற்றுண்டியாக கூட சாப்பிடலாம். உங்கள் சாலட்டில் மொறுமொறுப்பான மற்றும் சுவையான பூசணி விதைகளைச் சேர்க்கலாம் அல்லது வறுக்கப்பட்ட விதைகளை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம் அல்லது உங்கள் பேக்கிங் செய்முறையின் போது இவற்றை சேர்க்கலாம்.

Spread the love