பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு வசதியாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே இராணுவத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை இடம்பெறும.;
நாட்டில் அண்மைய நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்த வேண்டும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.