சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் 24 ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப்பதக்கத்தை நோர்வே தேசத்தின் ஸ்கை அதலன் வீராங்கனை தெரேஸ் ஜோஹோக் வென்றெடுத்தார். சனிக்கிழமை நடைபெற்ற 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஸ்கை அதலன் போட்டியில் பங்குபற்றிய தெரேஸ் ஜோஹோக, போட்டியில் அரைவாசி தூரத்திலிருந்து முன்னிலை அடைந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
14 தடவைகள் உலக சம்பியனான 33 வயதான தெரேஸ் ஜோஹோக, ஒலிம்பிக்கில் வென்றெடுத்த 2 ஆவது குளிர்கால ஒலிம்பிக் தங்கப்பதக்கம் இதுவாகும். இவர் இப் போட்டியை 44:13:7 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ரஷ்ய ஒலிம்பிக் குழு வீராங்கனை நட்டாலியா நெப்ரேவா (44:43:9) வெள்ளிப் பதக்கத்தையும் ஒஸ்ட்ரியாவின் தெரேசா ஸ்டட்லோபோட் (44:44:2) வெண்கலப் பதம்கத்தையும் வென்றெடுத்தனர்.