பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து தேர்வுக் குழு அறிவித்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தாண்டிற்கான மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்விற்காக அமெரிக்காவின் பென் எஸ்.பெர்னாக், டெளக்ளஸ் டைமண்ட், பிலிப் எச். டிவிக் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.