எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை விடுப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணம் 25% – 30% வரை அதிகரிக்கப்படும் என்பதுடன் புதிய பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையார்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.