ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொள்பவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க சமகால அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனநாயக ரீதியில் செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளதாகவும், இன்று காலை (27) பாராளுமன்றத்தில் தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளபோதிலும், அவர்களின் வன்முறை செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அத்துடன் இலங்கை எதிர்காலத்தில் சவாலான காலங்களை எதிர்கொள்ள உள்ளதாகவும், அதற்கான தீர்வுகளை பாராளுமன்றத்தினால் வழங்க முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொது மக்கள் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது பாராளுமன்றத்தை தாக்குவோம் என அச்சுறுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உதாசீனம் செய்யப்போவதில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள சவால்களை சமாளிக்க இளைஞர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.
நாடு எதிர்க்கொண்ட COVID-19 தொற்றின் சவாலான காலத்தின் போது அதனை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது என்றும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அயல் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் ஆதரவையும் அரசாங்கம் நாடியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அரசியலில் சில சீர்திருத்தங்கள் அவசியம் செய்ய வேண்டும் என்றும், நிறைவேற்றுக் குழு முறையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்த்து உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.