இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காவல் அதிகாரியை காவல் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரையும் ஈர்த்தது.
இந்த நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுவாரா என்ற சந்தேகம் பலரில் எழுந்துள்ளது. இதேவேளை, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்னர் பல தடவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.