போர்க்குற்றச்சாட்சியங்களை திரட்டுவதற்காக இலங்கை வரவிருந்த ஐ.நா குழுவுக்கு தடை

பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட 28 பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிரான போர்க்குற்றச் செயல் சாட்சியங்களைத் திரட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டினால் இந்த பிரதிநிதிகள் குழு அனுப்பி வைக்கப்படவிருந்தது. விசாரணையாளர், மொழிபெயர்ப்பாளர், வழக்குப் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கை விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சந்திக்கவும், வடக்கு தமிழ் அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தனர். எனினும், குறித்த பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

Spread the love