போர் குறித்து ஐ.நாவிடம்  ரஷ்ய பிரதிநிதி விளக்கம்

உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி இதனைக் கூறியுள்ளார்.


உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், நேட்டோ அமைப்பில் இணைவதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது என்றும் குறித்த பிரதிநிதி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போருக்கு காரணம் இவ்வாறான செயற்பாடுகளே என வெளிப்படையாகக் கூறியுள்ளார். உக்ரைனும் ஜோர்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன. ரஷ்யாவின் நலனைக்காக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.

Spread the love