பாராளுமன்றில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தமது இரண்டு தவணை ஜனாதிபதி பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும்?
இதுவே சிறந்த செயற்பாடாக இருந்திருக்கும். இன்றைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன. எனவே அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதே நேரம் விட்டுக்கொடுக்கவும் பழக வேண்டும் என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கிடையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.