சீனாவின் கருப்பு பட்டியலிலிருந்த மக்கள் வங்கி, நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து சேதன பசளை வாங்கிய விவாகரத்தில் பணத்தினை இலங்கை மக்கள் வங்கி வழங்காமல் தடை செய்து வைத்தது.
கொள்வனவு செய்யப்பட்ட சேதன பசளை தரமானதாக இல்லை என்ற காரணத்தினால் அவை திருப்பியனுப்பட்டன. அந்த சர்ச்சைகளின் போது பணத்தினை வழங்க வேண்டிய மக்கள் வங்கிக்கு பணத்தினை வழங்கவேண்டாம் என்ற அறிவுறுத்தலுக்கு இணங்க குறித்த பண பெறுமதியினை மக்கள் வங்கி சீன நிறுவனத்துக்கு வழங்கவில்லை.
சேதன பசளையினை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனம் முறைப்பாடு செய்ததனை தொடந்து மக்கள் வங்கி சீனாவின் கருப்பு பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் சீனாவுடனான எந்த கொடுக்கல் வாங்கல்களையும் மக்கள் வங்கி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.