மனித மூளையை ‘சிப்’ மூலம் கட்டுப்படுத்தும் புதிய முயற்சியில் உலக பணக்காரர்களில் ஒருவரும் “டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனங்களின் நிறுவுநருமான “எலான் மாஸ்க்” இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக மனித மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் குறித்த பரிசோதனையை எலான் மாஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் குறித்த சாதனங்களை தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும் எனவும், மனித மூளை என்ன நினைக்கின்றது என்பதையும் அந்தச் சாதனங்களில் பதிவு செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த ‘சிப்பின் மூலம் மனித மூளையில் ஏற்படும் முடக்குவாதம், நரம்பியல் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து சரி செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.