இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது. அந்த நிதியத்தால், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 16 வேலைத்திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, ஆனால் இலங்கை அதிகாரிகள் எவரும் அந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. இதேநேரம், உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.