அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அமைச்சு, சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.
தற்போழுது நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.