நேற்று காலை 4/03/2022 ல் ,28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய்க் கப்பல் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதற்குரிய கொடுப்பனவு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, எரிபொருளைத் தரையிறக்கும் பணிகள் இன்று பகல் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 2ம்திகதி 2/03/2022 அன்று, 37,300 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் இருப்பு இன்றையதிகதியில் 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது