சீன துணை அமைச்சர் சென் சோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையுடன் வலுவான, ஆற்றல்மிக்க இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்ப சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சென் , சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டக் குழுவை இலங்கைக்கு வழிநடத்துகிறார். கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற அதன் 20ஆவது தேசிய காங்கிரஸுக்குப் பின்னர், உயர்மட்டக் குழுவின் விஜயம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.