பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கரைத்துரைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று சபைக் கூட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர்.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு, தொடர்ச்சியான மின்வெட்டு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணிகளை முன்னிறுத்தி அவற்றிற்கு தங்கள் எதிர்பினைக் காட்டும் முகமாக இன்று 10ம் திகதி தமது கரைதுறைப்பற்று அலுவலகம் செல்லுவதற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்தி பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த விடயங்களில் அரசு தலையிட்டு சரியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதற்காகவும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று 10ம்திகதிமாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெறும் நிலையில் சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.