கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில் கிம் ஜாங் உன்னின் அத்தை இரண்டாண்டுகளுக்கு பின்னர் பொது வெளியில் முதல் முறையாக தோன்றியுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது மனைவி மற்றும் அத்தையுடன் கடந்த செவ்வாய்க்கிழமை சந்திரப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன்மூலம் கிம் ஜாங்கின் அத்தையான கிம்கியாங் ஹூய் இரண்டாண்டுகள் கழித்து பொது நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.
கிம் கியாங், கிம் ஜாங்கின் தந்தையான முன்னாள் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் கின் சகோதரி ஆவார். கிம் கியாங்கின் கணவர் ஜாங் சாங்குக்கு கடந்த 2013 இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஜாங் சாங் முன்னர் கிம் ஜாங்கின் வழிகாட்டியாக கருதப்பட்டார். ஆனால் தேசத் துரோக குற்றச்சாட்டில் சிக்கிய அவருக்கு அதிலிருந்து வீழ்ச்சி தொடங்கியது. இதன் பின்னரே மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.