கால்பந்து ஜாம்பவான் டியூகோ மாரடோனாவின் சாதனையை, அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி சமன் செய்துள்ளார். அர்ஜென்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுத் தந்தவர் மாரடோனா. அவர் உலக கோப்பையில் 21 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் மரடோனாவின் இந்த சாதனையை லயோனஸ் மெஸ்ஸி சமன் செய்தார். மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் போட்டுள்ளார். உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மாரடோனா, மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர்.