மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமொன்றை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக, அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது. இந்த ஆயுதம் ஒலியின் வேகத்தை விடவும், ஐந்து மடங்கு வேகமானதெனக் கூறப்படுகின்றது.
பி-52 குண்டு வீச்சிலிருந்து ஆயுதம் விடுவிக்கப்பட்டது. உக்ரைனின் இலக்குகளை நோக்கி ரஷ்யா அதிவேக ஆயுதங்களை ஏவியதுடன், அமெரிக்காவும் பதிலடி கொடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. அதேபோல, அண்மையில் சீனாவும் இதே போன்ற ஆயுதத்தை சோதனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.