- இங்கிலாந்தில் இடம்பெற்ற குடிப்பவர்கள் பற்றிய ஒரு பெரிய ஆய்வு, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட யூனிட் மது அருந்துவது மூளையின் சுருக்கம் மற்றும் முன்கூட்டிய வயோதிபம் என்பவற்றுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.
- ஒவ்வொரு கூடுதல் பானமும் சுருங்குவதை மோசமாக்குகிறது என்கிறார் ஒரு விஞ்ஞானி
இங்கிலாந்தில், 36,000 வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு ஒரு யூனிட் மது அருந்துவதில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை மது அருந்துவது இரண்டு வருட முதுமைக்கு இட்டுச் செல்லும் என்று கூறுகிறது.
அதிகமாக மது அருந்துபவர்கள் மூளையின் அமைப்பு மற்றும் அளவு ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ளனர், இது அறிவாற்றல் குறைபாடுகளுடன் தொடர்புடையது.
“நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” இதழில் வெளியிடப்பட்ட முடிவுகள், 50 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஆல்கஹால் யூனிட் வரை குடிப்பதால் அவர்களின் மூளை மூன்றரை ஆண்டுகள் வயதாகிறது என்று கண்டறியப்பட்டது.
எங்களிடம் மிகப் பெரிய மாதிரி (சாம்பிள்) இருப்பதால், ஒரு நாளைக்கு அரை பீர் மற்றும் ஒரு பீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூட நுணுக்கமாக கண்டறிய முடிகிறது, என்கிறார் கிடியோன் நேவ் என்கிற ஒரு ஆய்வாளர்.
“இந்த கண்டுபிடிப்புகள் பாதுகாப்பான குடி வரம்புகள் குறித்த அறிவியல் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களுடன் முரண்படுகின்றன” என்கிறார் க்ரான்ஸ்லர் என்பவர்.
மது அருந்துவது குறித்த மட்டுப்பாடுகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் எதுவும் இல்லை, மேலும் நுகர்வு வரம்புகள் மற்றும் பரிந்துரைகள் நாடுகளுக்கு இடையே மாறுபடும். ஹாங்காங்கில் “பாதுகாப்பான” குடி வரம்பு எதுவுமே இல்லை.
Frontiers in Psychiatry இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின்படி குறிப்பாக ஆபத்தான மற்றும் அபாயகரமான குடிப்பழக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள ஆண்கள் மத்தியில் கடந்த தசாப்தத்தில் குடிப்பழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது.
2007 இலிருந்து 2017 க்கு இடையில் சீனாவில் ஆல்கஹால் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 484,000 இலிருந்து 670,000 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் மோசமான உணவு மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் நடத்தைசார் ஆபத்து காரணியாக குடிப் பழக்கம் மாறியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள 302 மருத்துவமனைகளின் தரவுகளும் ஆல்கஹால் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது.