மின் தடை வருமா? வராதா? என்பது தொடர்பில் இன்று இறுதி முடிவெடுக்கப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிலைமைகளை ஆராய்ந்து இன்று மின்வெட்டினை தொடர்வதா இல்லையா என நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொது சேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரசபை தொழிற்சங்கள் மின் வெட்டு தொடர்பில் அறிவித்து மக்களை குழப்புவதாகவும், அவர்கள் அந்த அறிவித்தல்களை வழங்க முடியாதெனவும், அவர்கள் மீது மக்கள் வழக்கு தொடர முடியுமெனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மின்தடை நிறுத்தப்பட்டாலும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதனால் மின்தடைக்கான வாய்ப்புகள் விரைவில் ஏற்படுமென மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, திறைசேரிக்கு 93 பில்லியன் ரூபா பணத்தினை உடனடியாக மின்சாரசபைக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த பணத்தின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை மின்சாரசபை வழங்கவேண்டிய நிலுவை தொகையினை வழங்கவுள்ளது. ஆகவே இந்த நடவடிக்ககையினையும் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் மின்சாரசபைக்கு எரிபொருள் கிடைப்பது தொடர்பிலும் கலந்தாலோசித்து மின்தடை தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.