மின்வெட்டு உண்டா?

மின்வெட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இலையென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்து வரும் 10 நாட்களுக்கான எரிபொருள் மின்சார சபைக்கு கிடைத்துள்ளமையினால் மின்தடை தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஆம் திகதி முதல் நுரைசோலை அனல் மின்நிலையம் மீள ஆரம்பிக்கவுளள்து. ஆகவே எதிர்காலத்தில் மின்தடைக்கான தேவைகள் இல்லையென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்தடை இல்லாதபோதும் இன்று .மாலை 6.30 தொடக்கம் 10.30 வரையான நேரப்பகுதியில் 300 மெகா வொட்ஸ் மின்சாரத்துக்கான தட்டுப்பாடு உள்ளமையினால் சிறியளவிலான மின் தடைக்கான வாய்ப்புகள் உளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்கள், மின்சாரத்தை சிக்கமானமாகவும், உரிய முறையிலும் பாவித்தால் எதிர்காலத்தில் மின்தடைக்கான வாய்ப்புகள் இல்லையென ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

Spread the love