இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தலைநகர் கியீவ்(Kyiv)வின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் கூறியுள்ளார்..