சால்மன் மீனிலிருந்து விஞ்ஞானிகளால் தேனீர் கோப்பை தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நிலத்தின் தன்மையை வீணடிக்கிறது. அதனால் பயோபிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சால்மன் மீனின் விந்தணுக்களிலிருந்து, தேனீர் கோப்பையை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். கிழக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சால்மன் விந்தணுக்களில் இருந்து DNA ஐக் கொண் டு, சில ரசாயனங்களைக் கலந்து பயோபிளாஸ்டிக் தேனீர் கோப்பையை உருவாக்கியுள்ளனர். இவற்றை எளிதாக மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது. சால்மன் விந்தணுக்களிலிருந்து DNA இழைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டு, அயனோமர்களுடன் கலக்கப்பட்டு, பசை போன்று உருவாகி பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கக்கூடிய ஒரு ஜெல்லை உருவாக்குகின்றது. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் அக்வா-வெல்டிங் என்று அழைக்கின்றனர்.
இந்த ஜெல்லானது உலர்த்தப்பட்டு கப் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் செய்யப்படுகின்றது. இந்த செயல்முறை பாலிஸ்டி0ரீன் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதனை விடவும், 9% சதவீதத்திற்கும் குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகின்றன. அதேவேளை தற்போது பயன்பாட்டிலுள்ள, பிளாஸ்டிக்குகளை காட்டிலும் இவை சுற்று சூழலுக்கு ஏற்றதாக உள்ளதென, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பயோபிளாஸ்டிக்குகள் சோளமாவு, மரத்தூள் மற்றும் உணவுக்கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து, தயாரிக்கப்படுகின்றன. இவை பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக இருந்தாலும், சுற்றுச் சூழலுக்கு தகுந்ததாக உள்ளனவா என்பது சந்தேகமே. ஆனால், இதுபோன்று உருவாக்கப்படும் தேனீர் கோப்பைகள் பாதிப்பை ஏற்படுத்தாதென தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், இவற்றை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.