சீனாவின் ஆய்வுக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக இந்துஸ்தான் ரைம்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, யுவான் வாங் 5 கப்பல் இலங்கை பயணம் கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது. யுவான் வாங் 5 நேற்று முன்தினம் காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், தொடர்ந்தும் அங்கு நங்கூரமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை தற்போது சீன கப்பலின் இருப்பிடம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கடற்படையின் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.