தற்போதைய தமிழ் சினிமாவில் ஓடிடி நிறுவனங்களின் கால்த்தடம் நன்றாகவே பதிந்துவிட்டது. இதில் மக்கள் மத்தியில் பிரபலமான முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று தான் நெட்ஃபிளிக்ஸ். இந்த நிறுவனம் அடுத்து தங்களுடைய நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படங்கள் முதலில் திரையரங்கில் வெளிவந்த பிறகு நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்படும் என்ற ஒப்பந்தத்தின்படி தான் இந்த அணைத்து திரைப்படங்களையும் பல கோடி கணக்கில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அப்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள படங்கள் என்னென்ன, அவை எல்லாம் யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.