ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்றாம் தடுப்பூசி போதுமானதல்ல என தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இதுவரையில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காரணமாக ஏற்பட்ட மரணம் எதுவும் எங்கும் பதிவாகவில்லை. நியுமோனியா வரையிலான பாரிய நோய் நிலைமைக்கு உள்ளான ஒருவர் கூட அடையாளம் காணப்படவில்லை. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதே தற்போது முக்கிய தேவையாகவுள்ளது” என்றார்.