மூன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் யுத்த பகுதிக்குள் விஜயம்

உக்ரைன் தலை நகரான “கிவ் ” நகருக்குள் நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடுகள் வரிசையில் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரெயில் மூலம் நகருக்குள் பிரவேசித்துள்ளனர். இது வரலாற்று முக்கியத்துமிக்க நிகழ்வாகும்.

உக்ரைன் தலைநகர் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலானது மிக மோசமான பிடிக்குள் இறுகிய ஓர் நிலையைத்தோற்றுவித்துள்ளது. அந்த நகரை ரஷ்யப்படைகளின் குண்டுகள் துழைத்தெடுத்தவண்ணமே உள்ளன, அந்நகரின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று குண்டுவெடிப்புகளால் பெருத்த சேதம் அடைந்துள்ளது.

இந்த தருணத்தில் தான் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கிற 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரெயில் மூலம் கீவ் நகருக்கு நேற்று விரைந்தனர்.

அவர்கள் யார் யார் எனில் போலந்து பிரதமர் மேத்யூஸ் மோராவீக்கி, செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலா, சுலோவேனியாவின் பிரதமர் ஜானேஸ் ஜான்சா ஆகியோர் ஆவார்கள். போலந்தின் மூத்த தலைவர் ஜரோஸ்லா காசின்ஸ்கியும் இந்த குழுவுடன் இணைந்துள்ளார்.

உக்ரைனுக்கு தாம் அளிக்கும் ஆதரவினை வெளிப்படுத்துவது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு பணியாகக்கொண்டே தாம் போர் மண்டலத்துக்கு சென்றிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரிகள், உக்ரைனில் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாகவும் உயிருக்குப்பாதுகாப்பில்லை என்று கூறியபோதிலும், மத்திய ஐரோப்பிய தலைவர்களான அவர்களது பயணமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. இவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் டெனிஸ் ஷிமிகாலையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். 

இந்த பயணத்தின் நோக்கம் குறித்து செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலா கூறும்போது, “இந்த பயணத்தின் நோக்கம், உக்ரைனுக்கும், அதன் சுதந்திரத்துக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தெளிவான ஆதரவை வெளிப்படுத்துவதுதான்” என குறிப்பிட்டார். 

போலந்து பிரதமர் மேத்யூஸ் மோராவீக்கி ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நானும் மற்ற தலைவர்களும் உக்ரைன் செல்வதுதென்பது  வரலாற்றுசிறப்புமிக்க பயணம் ஆகும். இது குறித்து ஐ.நா. சபைக்கு தெரிவித்துள்ளோம். உலகில்  இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் வரலாறு புனையப்பட்ட இடத்தில் இருப்பது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்களைப் பற்றியது அல்ல. ஆனால் கொடுங்கோன்மை இல்லாத உலகில் வாழ்வதற்கு தகுதியான எங்கள் குழந்தைகளைப்பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Spread the love