யாழில் அரச ஆதரவாளர்களை மட்டும் அழைத்து இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வு

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை எடுத்தல் ஆணைக்குழு அதன் தவிசாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் இஹிறி தலைமையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த ஆணைக்குழு அமர்வு தொடர்பில் எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் இன்றி இடல்பெற்ற அதே நேரம் அரச கட்சியின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களுமே அதிகமாக கலந்துகொண்டனர். இவ்வாறு இடம்பெற்ற அமர்வில் பிரசன்னமான ஊடகவியலாளர்களும் படம் எடுக்கவோ அல்லது ஒளிப்பதிவு செய்யவோ முடியாது எனவும் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு இடம்பெற்ற அமர்வில் சுமார் 40 பேர் பங்குகொண்டிருந்தனர்.

Spread the love