யாழில் படையினர் உதவியுடன் டெங்கு ஒழிப்பு…

டெங்கு நோய் அதிகமாய் பரவி வருவதின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் சுகாதார அதிகாரிகளின் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கடந்த ஜனவரி 30 ம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா படையணியின் படையினர் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

Spread the love