யாழில் வேகமாக பரவும் 3வகையான காய்ச்சல்

நாட்டில் மூன்று வகையான காய்ச்சல்கள் தற்போது அதிவேகமாகப் பரவுகின்றன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனவே காய்ச்சல் ஏற்பட்டு 48 மணித்தியாலத்துக்குள் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பாக ஆராய வேண்டும். கவனவீனமாகச் செயற்பட வேண்டாம். காய்ச்சல் ஏனையோருக்கும் பரவும் என்பதால், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். 

Spread the love