மன்னார்க் கடல் தொழிலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவரைக் காணவில்லை என திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று மன்னாரில் தங்கு தொழிலில் ஈடுபடும் மூவர் தூண்டில் வலையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலையும் ஓர் படகில் மூவர் பயணித்துள்ளனர். இவ்வாறு சென்ற மூவரில் இருவரே காணாமல் போயுள்ளனர்.
ஓர் படகில் பயணித்த சமயம் இயந்திர சீரிற்காக ஒருவர் கடலில் இறங்கிய சமயம் அவர் கடலில் அடித்துச் செல்லப்படுவதனை அவதானித்த இரண்டாவது தொழிலாளி கடலில் இழுத்துச் செல்பவரை காப்பாற்றும் நோக்கில் குதித்தபோது இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் தொடர்பிலும் திணைக்களத்தின் ஊடாக கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதனால் கடற்படையினர் தற்போது தேடி வருகின்றனர்.