யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும்நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை தவறிவிட்டது – ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பதில் ஆணையாளர் கவலை  

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதும் காணாமல்போனவர்கள் உறவினர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அந்த நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதுடன் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித 2022 மார்ச்சில் எங்கள் முன்னைய எழுத்துப்பூர்வமான இற்றைப்படுத்தலிலிருந்து நாடு முன்னொரு போதுமில்லாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த மாதங்களில் பணவீக்கம் அதிர்ச்சியூட்டும் வகையில் 66.7 சதவீதமாக உள்ளது. பல மாதங்களாக இலங்கையர்கள் எரிபொருள், மின்சாரம், உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடுகளை எதிர் நோக்கி வருகின்றனர்.63 இலட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த உண்மைகள் உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மக்களின் உரிமையை பலவீனப் படுத்தியுள்ளன.

மிகவும் பாதிக் கப்படக்கூடியவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் உறுப்பு நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, இது சம்பந்தமாக அதன் முக்கிய பொருளாதார மற்றும் சமூக உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு நிதி ரீதியான வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், பிரிக்கமுடியாத உரிமைகளின் வலுவான வெளிப்பாடாக, இலங்கையின் அரசியல் பரப்பில் மாற்றத்தை கோரி குறிப்பிடத்தக்க மற்றும் முன்னொருபோதுமில்லாத வெகுஜன எதிர்ப்புகளையும் நாடு கண்டது. சமீபத்திய வாரங்களில்  கவலைக்குரிய வகையில், போராட்ட இயக்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர் கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம்திகதி மூன்று மாணவர் தலைவர்களைக் கைது செய்ய பயங்கரவாதத்தடை சட்டத்தைப் பயன்படுத்தியது குறிப்பாக கவலையளிக்கிறது. 2022 ஜூனில் அரசாங்கம் அறிவித்த போதிலும், இந்த ஆண்டு மார்ச் முதல் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு நடைமுறைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்புச் சட்டங்களைதிரும்பவும் நம்பியிருக்காமல் , அமைதியான போராட்டம், விமர்சன ரீதியான கலந்துரையாடல் மற்றும் அதற்கான சூழலை வளர்ப்பதற்கு சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கும் முரண்பாட்டின் பாரம்பரியத்தை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்திற்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனாதிபதி பாராளுமன்றத்தில்தனது முதலாவது உரையில் இலங்கைத்தேசத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து அரசியலமைப்பு மறுசீரமைப்புகளுக்கு உறுதியளித்ததொனியை நான் வரவேற்கிறேன். மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் நிலைமாறுகால நீதி மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

கடந்த மனித உரிமை மீறல்களில் சிக்கிய இராணுவ அதிகாரிகள் அல்லது முன்னாள் துணை இராணுவத் தலைவர்களை நீக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். முக்கியமாக இந்து அல்லது முஸ்லிம் இடங்களில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பது அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ நிலைகளை விரிவுப்டுத்துவது தொடர்பான காணி தகராறுகள் தொடர்வது நல்லிணக்கத்தை மேலும் மேலும் குலைத்து புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. சிவில் சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்ட குழுக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீது , பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் கவலையளிக்கின்றன. அடிப்படை பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருதல் போன்றவை இல்லாமல், இந்த பரவலான கண்காணிப்பு மற்றும் அடக்குமுறை கலாசாரம் முடிவுக்குவராது. யுத்தம் முடிவடைந்து பதின் மூன்று வருடங்களாகியும், பல்லாயிரக்கணக்கான தப்பிப்பிழைத்தவர்களும் அவர்களது குடும்பங்களும் நீதியை நாடி, தமது அன்புக்குரியவர்களின் கதியைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இழப்பீடுகள் தேவைப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்து பதின் மூன்று வருடங்களாகியும், பல்லாயிரக்கணக்கான தப்பிப்பிழைத்தவர்களும் அவர்களது குடும்பங்களும் நீதியை நாடி, தமது அன்புக்குரியவர்களின் கதியைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இழப்பீடுகள் தேவைப்படுகின்றன. வினைத்திறனான நிலைமாறு கால நீதிச் செயன்முறையைத் தொடரவும், உண்மை , நீதி மற்றும் இழப்பீடுகளுக்கான பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் இலங்கை அரசு பலமுறை தவறிவிட்டது. மாறாக, எங்கள் முந்தைய அறிக்கைகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அடுத்தடுத்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கு அரசியல் தடைகளை உருவாக்கி, போர்க் குற்றங்களில் நம்பத்தகுந்த வகையில் சம்பந்தப்பட்ட சில இராணுவ மற்றும் முன்னாள் துணை இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஊக்குவித்து, ஒருங்கிணைத்து,மோதல் மற்றும் அதன் மூலகாரணங்கள் தொடர்பான பகிர்ந்து கொள்ளப்பட்ட புரிதலை முன்வைக்கத் தவறிவிட்டன.

இதேபோல், சில சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டின் பயங்கரமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றிய உண்மையை நிறுவுவது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் விசாரணையைத் தொடர, சர்வதேச உதவியுடன் ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு , குறிப்பாக பாதுகாப்பு ஸ்தாபனத்தின் பங்கு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழு பங்கேற்புக்கு உத்தரவாதம் அளிக்கும் செயற்பாட்டிற்கு ஐ.. நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அழைப்புவிடுக்கிறது. கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் இந்த அடிப்படைச் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு நாட்டில் மாறிவரும் சூழ்நிலைகளால் வழங்கப்பட்ட வாய்ப்பை அரசாங்கம் இப்போது பயன்படுத்திக் கொள்ளும் என்பது இந்த அலுவலகத்தின் நம்பிக்கையாகும். இலங்கையில் தற்போதைய மற்றும் பயனுள்ள பொறுப்புக்கூறல் தெரிவுகள் இல்லாத நிலையில், சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு மற்றும் உலகளாவிய அதிகாரவரம்பின் அடிப்படை. மாற்று உபாயங்களை பின்பற்றுமாறு உயர்ஸ்தானிகர் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தீர்மானம் 46/1, பத்தி 6 இற்கு இணங்க பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக எனது அலுவலகத்தில் நிறுவப்பட்ட குழு முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பேரவையின் 49 ஆவது அமர்வில் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டது போல், இந்த பொறுப்புக்கூறல் பணியின் பரிமாணம் மற்றும் வகைக்கு போதுமான நேரம், நிதிவளங்கள் மற்றும் அரசாங்கங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே இந்த முக்கியமான பணி சரியான முறையில் வலுப்படுத்தப்படு வதை உறுதி செய்யுமாறு நான் இந்த சபையை வலியுறுத்துகிறேன்.தண்டனைவிலக்கீடு என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஒரு பிரதான தடையாக உள்ளது. இந்த தண்டனை விலக்கீடு மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது, ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான வளமான களத்தை உருவாக்கியுள்ளது, அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பங்களிக்கிறது. 46/1 தீர்மானத்தின் கீழ் இந்த சபை வழங்கிய ஆணை – மனித உரிமை நிலைமையை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூ றல் ஆகியவற்றைத் தொடர்வது  முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியமானது என்பதுடன் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களால் வெளிப்படுத்தப்படும் மாற்றத்திற்கான பரந்த அடிப்படையிலான அபிலாஷைகளுக்கு பதிலளிக்கிறது.

Spread the love