ரம்புக்கனை போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கனை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.