கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை. இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.