ரயிலில் இருந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்த வடகொரியா

அமெரிக்காவின் பொருளாதார தடையை பொருட்படுத்தாத வட கொரியா இம்மாதத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணைகளை சோதித்துள்ளது. இந்த முறை ரயிலில் இருந்து 2 ஏவுகணைகளை ஏவி சோதனையை நடத்தியுள்ளது. ஏவுகணை சோதனை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடியாக ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவி மற்றொரு சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.

வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எனினும், அந்நாட்டின் ஏவுகணை மோகம் தீர்ந்தபாடில்லை. கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை அந்நாடு தொடர்ந்து சோதித்து வருகிறது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை பொருட்படுத்தாத வடகொரியா இம்மாதத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணைகளை சோதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love